ECONOMYMEDIA STATEMENT

2023 இல் பாங்கி நாடாளுமன்ற தொகுதி  அதிகமாகவும், லுபோக் ஹந்து மிகக் குறைவான மக்கள் தொகையையும் கொண்டுள்ளன

புத்ராஜெயா, ஜூன் 26: மலேசியாவில் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாங்கி நாடாளுமன்றம் 2023 ஆம் ஆண்டில் 708,300 மக்களுடன், அதிகமான மக்கள் தொகையைப் பதிவு செய்துள்ளது என்று மலேசியாவின் புள்ளியியல் துறை இன்று வெளியிட்ட 2024  தேசிய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து சிலாங்கூரில் கோத்தா ராஜா மற்றும் சுபாங் ஆகிய இரண்டு நாடாளுமன்றங்கள் முறையே 538,900 மற்றும் 492,600 குடியிருப்பாளர்களை கொண்டுள்ளன.

தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் கூறுகையில், சரவாக்கில் உள்ள மூன்று நாடாளுமன்றங்களில் மொத்தம் 30,000க்கும் குறைவான மக்கள் உள்ளனர், அதாவது கனோவிட் 25,300 பேர், அதைத் தொடர்ந்து லுபோக் ஹந்து  மற்றும் இஙான் முறையே 27,400 மற்றும் 28,000 பேர் உள்ளனர்.

“கோலாலம்பூரில் உள்ள வாங்சா மாஜு நாடாளுமன்றம், ஒரு சதுர கிலோமீட்டருக்கு (கிமீ) 13,587 பேர் என்ற அதிக அடர்த்தியான மக்கள் தொகையை  பதிவு செய்துள்ளது.
“சிலாங்கூரில் உள்ள பாண்டன் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 11,713 பேருடன் இரண்டாவது இடத்திலும் , பினாங்கின் ஜெலுத்தோங் மூன்றாவது அடர்த்தியுடன், அதாவது ஒரு  சதுர கிலோமீட்டருக்கு 11,576 பேருடன்  உள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் மலேசிய மக்கள்தொகையின் மக்கள்தொகையின் அடிப்படையில், செத்தியூ நாடாளுமன்றத்தில் அதிக பூமிபுத்ரா மக்கள்தொகை பதிவாகியுள்ளது, இங்கு 125,400 பேர், அதே சமயம் அதிக சீன மக்களை கெப்போங்கும் 72.2 சதவீதம் அல்லது 64,000 பேர், மற்றும் ஈப்போ மேற்கு நாடாளுமன்ற தொகுதி அதிக இந்திய இனம் 26.0 சதவீதம் அல்லது 33,500 பேரைக்கொண்டுள்ளன.

முகமட் உசிரின் கூற்றுப்படி, 15 முதல் 64 வயதுக்குட்பட்ட  177,200 பேருடன் பத்து பாராளுமன்றம்  பணிபுரியும் வயதுடையவர்களில் முன்னணியில் உள்ளது.  அதைத் தொடர்ந்து பத்து காவான் (132,300 பேர்) மற்றும் கெப்போங் (83,700 பேர்களுடன் 3வது நிலையில் உள்ளது.

“0 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் புத்ராஜெயா 43,000 பேர், குவா மூசாங் (40,800 பேர்) மற்றும்  தும்பாட் நாடாளுமன்ற தொகுதி (61,000 பேர்) அத்தொகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் விளக்கினார்.

கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பின் பின்னணியில், சரவாக்கில் உள்ள பாரம் பாராளுமன்றம் 77 தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஒன்பது இடைநிலைப் பள்ளிகள் மற்றும் 22 சுகாதார கிளினிக்குகள் உட்பட 86 பள்ளிகளுடன் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் மற்றும் வசதிகளைப் பதிவு செய்துள்ளது என்றார்.

அடிப்படை வசதிகள் அம்சத்தில், பூலாய் நாடாளுமன்றத்தில் 71 நிலையங்கள், பாங்கி (66 சலவை நிலையங்கள்), லாஹட்  டத்து (618 மளிகைக் கடைகள்), பெட்டாலிங் ஜெயா (232 மருந்தகங்கள்) மற்றும் சுபாங் (140 உணவகங்கள்) ஆகியவற்றுடன் அதிக எரிவாயு நிலையங்களை கொண்டுள்ளதாக காட்டுகிறது.


Pengarang :