ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மகளிருக்கு நற்செய்தி- ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறுகிறார்

கோல சிலாங்கூர், ஜூன் 30- அடுத்த வாரம் கூடவிருக்கும் மாநில
சட்டமன்றக் கூட்டத்தில் மகளிருக்கு பல நற்செய்திகள் காத்திருப்பதாக
மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
சட்டமன்றத்தில் வெளியிடப்படவுள்ள அறிவிப்புகளில் 2024-2026 சிலாங்கூர
மகளிர் கொள்கை மற்றும் செயல்திட்டம், யாயாசான் இன்சான்
இஸ்திமேவா சிலாங்கூர் உருவாக்கம் ஆகியவையும் அடங்கும் என்று
அவர் சொன்னார்.
கடந்த மே 30ஆம் தேதி தொடங்கப்பட்ட 2024-2026 சிலாங்கூர் மகளிர்
கொள்கை மற்றும் செயல் திட்டத்தை முழுமைப்படுத்தி சிலாங்கூர்
சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று
அவர் தெரிவித்தார்.
நாம் அறிமுகம் செய்யவுள்ள மற்றொருத் திட்டம் யாயாசான் இன்சான்
இஸ்திமேவா சிலாங்கூர் அறவாரியம் உருவாக்கமாகும். இந்த
அறவாரியத்தை வரும் நவம்பர் மாதம் தொடக்கி வைக்கத்
திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இந்த திட்டம் இளைஞர்கள் உள்பட மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்குப்
பயன் தரும். இதற்கான நிதி மாநில அரசிடமிருந்து மட்டுமின்றி பெரு
நிறுவனங்களிடமிருந்தும் கிடைப்பதால் இத்திட்டத்தை அமல்படுத்துவதில்
கட்டுப்பாடற்ற ஒத்துழைப்பை பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள டி பள்மா ரிசோர்ட்டில் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும்
சொத்துடைமை நிறுவனம் மற்றும் சிலாங்கூர் மகளிர் திறன் மேம்பாட்டு
அமைப்பின் (டபள்யூ.பி.எஸ்.) ஏற்பாட்டில் நடைபெற்ற சொத்து உரிமை
சட்ட விழிப்புணர்வு நிகழ்வை முடித்து வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் ஜூலை மாதம் 4 முதல் 18
வரை நடைபெறும் என்று சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான்
முன்னதாக கூறியிருந்தார்.

Pengarang :