ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரின் பொருளாதார மதிப்பு RM40,000 கோடி- மூன்று மாநிலங்களின் கூட்டு மதிப்பை  மிஞ்சியது.

ஷா ஆலம், ஜூலை 2 : சிலாங்கூர் 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்பு RM406.1 பில்லியனை( 40,610 கோடி) பதிவு செய்து, ஜொகூர், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களை விஞ்சியது.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த எண்ணிக்கை மலேசியாவில் RM400 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை கொண்ட முதல் மாநிலமாக சிலாங்கூர் உள்ளது என்றார்.

“ஜோகூர், சரவாக், பினாங்கு போன்ற பிற மாநிலங்களின் பொருளாதார மதிப்பு இணைந்தாலும் சிலாங்கூரின் அளவும் பொருளாதார மதிப்பும் அதிகம்.

“உண்மையில், சிலாங்கூர் 2022 உடன் ஒப்பிடும்போது வளர்ச்சி 5.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அது  கடந்த ஆண்டை விட மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.


2017 ல் இருந்து RM 103.9 பில்லியனில் இருந்த பொருளாதாரம் RM406.1 பில்லியனாக (25.59 சதவீதமாக)  அதிகரித்துள்ளது. 2018 ல் புதிய நிர்வாகம் மாநிலத்தை கைப்பற்றிய பிறகு சிலாங்கூரின் பொருளாதாரமும் வேகமாக வளர்ந்துள்ளதாக அமிருடின் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, சிலாங்கூரின் பொருளாதாரத்தின் முக்கிய செயல் திறனும் சேவைத் துறையால் இயக்கப் படுகிறது, அது 6.1 சதவிகிதம் வளர்ந்துள்ளன, இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் 61 சதவிகித பங்களிப்பை வழங்கியுள்ளது.

“2023 ஆம் ஆண்டில் கட்டுமானத் துறையில் 10.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் உற்பத்தித் தொழில் 2.0 சதவிகிதம் அதிகரித்துள்ளது,  மாநிலத்தின் மொத்தப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை நெருங்குகிறது உற்பத்தித்துறை. அது 29.4 சதவிகிதம்” என்று மலேசிய புள்ளி விவரத் துறையின் தரவுகளை காட்டி அவர் கருத்து தெரிவித்தார். (DOSM).

இன்றைய DOSM அறிக்கை, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சிலாங்கூரின் பொருளாதாரப் பங்களிப்பு 2023ல் 25.9 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும், இது முந்தைய ஆண்டை விட 25.5 சதவீதத்தில் இருந்து முன்னேற்றம் என்பதை அது காட்டுகிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் 5.4 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டு நாட்டின் சராசரி வளர்ச்சியான 3.6 சதவீதத்தை தாண்டியது.


Pengarang :