MEDIA STATEMENTSELANGOR

சரவா சுக்மா போட்டியில் தங்கம் பெற சிலாங்கூர் கபடிக் குழு நம்பிக்கை

ஷா ஆலம், ஜூலை 30-  சிலாங்கூர் சிலம்பக் குழுவின்  ஏற்பாடுகள் ஏறக்குறைய முழுமைப் பெற்றுள்ள நிலையில்   21வது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா)  ஐந்து தங்கப் பதக்கங்களை வெற்றி கொள்வதற்காக களத்தில் இறங்கும் அந்த  தருணத்திற்காக ஆட்டக்காரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டியில்   கபடிப் போட்டி  முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த  கபடி விளையாட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர்களைக் கொண்ட சிலாங்கூர்  அணி சவால்களை எதிர்கொண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுத் தரும் என்று அதன் தலைமைப் பயிற்சியாளர் வி. உதய குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

எங்கள் பயிற்சி தீவிரமான கட்டத்தில் நுழைந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் வாரத்திற்கு ஐந்து பயிற்சிகளில்  கலந்து கொள்வதோடு  இறுதி  மூன்று வாரங்களில் இடைவிடாத பயிற்சிகளில் ஈடுபடுவர் என்று அவர் தெரிவித்தார்.

நாங்கள் 95 சதவீதம் தயாராக உள்ளோம். எஞ்சிய ஐந்து சதவீதம் சிலாங்கூரின் பெயரை உயர்த்தும் அந்த போட்டிக்கு  புறப்படுவதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறோம் என்று  இன்று அணியின் பயிற்சியின் போது பெர்னாமாவுக்கு  அளித்த பேட்டியில் அவர்  கூறினார்.

சிலாங்கூர் அணி தனித்திறமை, குத்து வரிசை, போரிடுதல் (ஆயுதப் போர்), ஆயுதம் ஏந்திய மற்றும் ஆயுதமில்லா  தாள நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கும் என்று அவர் தெரிவித்தார்.

தங்கப் பதக்கங்களை வெல்வதற்கான தங்களின் வாய்ப்புகளை ஆட்டங்காணச் செய்யும் ஆற்றல் உள்ள குழுவாக நாங்கள் சரவாவைக் கருதுகிறோம் என உதயகுமார் குறிப்பிட்டார்.

எட்டு மாத கடுமையானப் பயிற்சிக்குப் பிறகு எந்த அணியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் தமது குழுவினர் உள்ளதாகக் கூறிய அவர்,   அதே நேரத்தில் எதிராளிகளின் திறனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று விளையாட்டாளர்களுக்கு தாம் நினைவூட்டி உள்ளதாக சொன்னார்.


Pengarang :