MEDIA STATEMENTSELANGOR

லைசென்ஸ் முறை அமலாக்கத்திற்கு சமூக ஊடக சேவை வழங்குநர்கள் கொள்கையளவில் ஒப்புதல்

பூச்சோங், ஆக 3- லைசென்ஸ் வழங்கும் முறையின் அமலாக்கத்திற்கு இணையச் சேவை வழங்குவோர் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் தொடர்பு  அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
சிங்கப்பூரிலுள்ள சில சேவை வழங்குநர்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர்களிடமிருந்து இந்த பதில் கிடைத்ததாக அவர் சொன்னார்.

எனினும், இது வரை எந்த சேவை வழங்குநர்களும் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.. நாங்கள் இதுவரை எந்த விண்ணப்பத்தையும் பெறவில்லை. காரணம், ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி சமூக ஊடகங்களுக்கான லைசென்ஸ் அல்லது ஒழுங்கு முறை செயல் வடிவம் குறித்து மட்டுமே அறிவிக்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நாங்கள் தற்போது அவர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறோம். சிங்கப்பூரிலுள்ள இணையத் தள பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் இப்போதுதான் நான் நாடு திரும்பினேன் இன்று இங்கு நமக்கு நாம் எனும் இளைஞர் மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மலேசியாவில் குறைந்தது 80 லட்சம் பதிவு பெற்ற பயனர்களைக் கொண்ட சமூக ஊடகங்களும் இணையை தகவல் சேவை வழங்குநர்களும் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் கடந்த மாதம் 27ஆம் தேதி கூறியிருந்தது.
சமூக ஊடகங்களுக்கான ஒழுங்கு முறை செயல்வடிவம் ஆகஸ்டு முதல் தேதி அறிமுகப்படுத்தப் படும் நிலையில் வரும் 2025 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி இந்த லைசென்ஸ் விதிமுறை அமலுக்கு வருகிறது.

Pengarang :