PBTSELANGOR

உயரந்த அர்ப்பணிப்பு, ஒருங்கிணைந்த வேலைச் சிந்தனையைக் கொண்டு இலக்கை அடையலாம்

பெட்டாலிங் ஜெயா, மே 13:

உயர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் பெருமுயற்சி எடுத்து, கொடுக்கப் பட்ட பணிகள் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின்  (எம்பிபிஜே) சிறந்த பணியாளராக தேர்ந்தெடுக்கப் பட்ட சுற்று சூழல் சுகாதார அதிகாரி, மாஸுரா முகமட் அமின், வயது 37, கூறினார். சக பணியாளர்கள் அனைவருடனும் ஒருங்கிணைத்து ஒரு குழுவாக சேவையாற்றி பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”   எம்பிபிஜே-இல் பணியாற்றுவது சுலபமில்லை, ஏனெனில் மிகவும் உயர்ந்த  அர்ப்பணிப்பு வேண்டும். எனது சக பணியாளர்களின் ஒத்துழைப்பை நான் எண்ணி பெருமை கொள்கிறேன். மக்களின் நல்வாழ்விற்கு நமது கடமையை கண்ணியமான முறையில் நிறைவேற்ற பாடுபட வேண்டும். கட்டொழுங்கு மற்றும் பொறுமை பணிகளை மேற்கொள்ள மிகவும் அவசியம். தொடர்ந்து நான் எனது சேவையை எம்பிபிஜே மற்றும் மக்களுக்கு ஆற்ற வேண்டும்,” என்று திடக்கழிவு நிர்வாகம் மற்றும் பொது சுகாதார இலாகாவின் பணி புரியும் மாஸுரா சிலாங்கூர் இன்றுவிடம் தெரிவித்தார்.

மாஸுரா 14  ஆண்டுகள் எம்பிபிஜே-வில் பணி புரிந்து சிறந்த பணியாளர்கள் விருது பெற்ற 149 பேரில் ஒருவர் ஆவார். எம்பிபிஜே சிறந்த பணியாளர்கள் விருதுகளை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழங்கினார். அவரோடு பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் அஸிஸி முகமட் ஜைன் மற்றும் துணை மேயர் ஜோஹாரி  அன்வரும் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே, புகைப்பட கலைஞர், இந்தான் கைரானா முகமட் ஸாலி கூறுகையில், 2005-இல் இருந்து பணி புரிந்து சிறந்த பணியாளர்கள் விருது பெற்றதற்கு எம்பிபிஜே சிறந்த பணி புரியும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.


Pengarang :