NATIONAL

லஞ்சத்தால் ஆண்டுக்கு 40 சுங்கத்துறை அதிகாரிகள் வேலை நீக்கம்

ஷா ஆலாம் – லஞ்சம் விவகாரத்தில் ஈடுப்படும் சுங்கத்துறை அதிகாரிகளில் ஆண்டுக்கு 40 பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக அதன் தலைமை இயக்குனர் டத்தோ டி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

லஞ்சம் விவகாரத்தில் எந்நிலையிலும் சுங்கத்துறை யாருடனும்  இணக்கம் கொள்ளாது என்றும் அவ்வாறு ஈடுப்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் சுங்கத்துறை உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

சுங்கத்துறை லஞ்ச விவகாரத்தை கடுமையாக கருதுவதாக கூறிய அவர் இதில் எவ்வித உடன்பாடும் கொள்ளப்படாது என எச்சரித்தார்.மிக கடுமையாக கருதப்படும் லஞ்ச விவகாரத்தால் ஆண்டுக்கு சுமார் 40 அதிகாரிகள் வேலை இழப்பதாகவும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

லஞ்ச செயல்பாடுகளை அடியோரு வேரருப்பதில் சுங்கத்துறை தீவிர முனைப்புக்காட்டுவதாகவும் கூறிய அவர் அது தொடர்பில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்களிப்பினை மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர் சுங்கத்துறை அமலாக்க செயல்பாடுகளில் இருக்கும் பலவீனங்களை மறுக்கவில்லை.மாறாய்,அதனை களையவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

சுங்கத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து சட்டவிரோதமாய் எந்தவொரு பொருளும் நாட்டுகுள் நுழைந்து விட முடியாது என்று எச்சரிக்கை விடுத்த அவர் சட்டவிரோதமாய் செயல்படுவதற்கு லஞ்சத்தை சன்மானமாய் பெறும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் நினைவுறுத்தினார்.

சுங்கத்துறையில் லஞ்சத்தில் குறிப்பிட்ட சிலரே ஈடுப்படுவதாகவும் கூறிய அவர் அதனை முற்றாக துடைத்தொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் லஞ்சத்தை முடிவுக்கட்ட ஆண்டுக்கு ஒருமுறை அதிகாரிகள் பணி இடம் மாற்றம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

kastam

 

 


Pengarang :