RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: சபா & சரவாக் மாநிலங்களை விட அமெரிக்காவிற்கு உதவுவது முக்கியமா?

ஷா ஆலம், செப்டம்பர் 13:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, அமெரிக்க நாட்டில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் AS$ 24 மில்லியன் (ரிம 100 மில்லியன்) முதலீடு செய்ய முடிவு செய்துள்ள செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்று தெரிவித்தார். இந்த முதலீடு அமெரிக்க பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சி என்று நஜிப் அறிவித்துள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது. மலேசியா நாடு தற்போது மிகப்பெரிய முதலீடு வாய்ப்புகளை எதிர் நோக்கி வருகிறது. மேலும் ஏன் மலேசியா உலக பொருளாதார வல்லரசு நாட்டில் முதலீடு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அஸ்மின் அலி மேலும், அண்மையில் சிலாங்கூரில் இகியா நிறுவனம் ரிம 1 பில்லியனை பூலாவ் இண்டாவில் முதலீடு செய்ய இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி னார். இஃது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று கூறினார்.

Azmin MB

 

 

 

 

 

 

”   சேமநிதி வாரியம் AS$ 3 பில்லியனில் இருந்து AS$ 4 பில்லியன் வரை அமெரிக்கா நாட்டின் பொது வசதிகளை மறுசீரமைப்பு செய்ய பயன்படுத்த உள்ளது என்று நஜிப் அறிவித்துள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் பிரதமர் அமெரிக்கா நாட்டின் பொது வசதிகளை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை சபா மற்றும் சரவாக் மாநிலங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை விட முக்கியமா? சேமநிதி வாரியத்தின் நிதி மக்களின் சேமிப்பு. இதனை நஜிப் தனது இஷ்டப்படி பயன்படுத்துவது தவறு,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

அஸ்மின் அலி தனது அறிக்கையில், நஜிப் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சந்தித்த நிகழ்வை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், வெறுமனே புகைப்படம் எடுத்து கொள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடமானம் வைக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

Pertemuan Najib – Trump: Pelik, misteri, mengejutkan, kenapa?

“Kami mahu membantu anda mengukuhkan ekonomi AS”

#கேஜிஎஸ்


Pengarang :