Uncategorized @ta

அஸ்மின்: மாநிலத்தின் கையிருப்பு அதிகரிப்பு, ஒவ்வொரு வெள்ளியும் மக்கள் நலனுக்கே செலவிடப்படும்

பூச்சோங், அக்டோபர் 7:

மாநில நிதி கையிருப்பு 4 பில்லியனாக எட்டியுள்ளது. இது  அரச
நிர்வாகத்துக்குக் கண் மூடித் தனமாக செலவுகளைச் செயதற்கான உத்தரவாதம் கிடையாது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

சமூக நலனை அடிப்படையாகக் கொண்ட மேம்பாட்டில் கவனம் செலுத்துவது  மாநில
அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
சமூக நலன் கொள்கை மற்றும் முன்முயற்சியின் வழி இந்தப்பணத்திலிருந்து
ஓவொரு வெள்ளியும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று அஸ்மின் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தின் பொருளாதரம் நல்ல நிலையில் இருப்பதால் 4 பில்லியன் வரை மாநில அரசாங்கத்தின் கையிருப்பு எட்டியுள்ளது. இருப்பினும் இந்தப்பணம் என் சொந்த
சட்டைப்பைக்குள் நான் போட்டுக்கள்ளவில்லை.  இந்தப் பணத்தைக் கொண்டு மந்திரி
பெசாருக்காக மாளிகை கட்டிக்கொள்ளவில்லை.

பண்டார் கின்ராராவில் நடந்த விவேக வாடகை சாவி ஒப்படைக்கும்
நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பேசுகையில் அஸ்மின் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அரசாங்க  மட்டத்தில் நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும்
பலவீனமான நிதி மேலாண்மை இருந்த போதிலும், சிலாங்கூர் மாநிலம் தனது கையிருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளதை  4,1 பில்லியன் வெள்ளி தொகையைத் தாண்டியிருப்பதன் வழி காட்டுகிறது.

இந்நிலை சிலாங்கூர் மாநிலம் மேம்பட்ட மாநிலமாகத் தொடர்ந்து நீடிப்பதுடன் உள்நாட்டு உற்பத்தியில் (கே.டி.எம்.கே ) அதிகமாகப் பங்களிக்கும் மாநிலமாக
இருந்துவருகிறது.

அரசின் நிதி மற்றும் பொருளாதார மேலாண்மை திறமையான முறையில்
கையாளப்பட்டுவருவதால்   மாநில அரசின் இருப்புக்கள் அதிகரித்திருப்பதாக
முகமது அஸ்மின் நம்புகிறார்.

#சரவணன்


Pengarang :