Uncategorized @ta

நான்காம் தொழில் புரட்சியை எதிர் கோள்ள யுனிசெல் தயாராக உள்ளது

ஷா ஆலம்,அக்டடோபர் 7:

டத்தோ மந்திரி புசார் பரிந்துரைகளுக்கு ஏற்ப,சிலாங்கூர் பல்கலைக்  கழகம் (UNISEL), துணை வேந்தர், பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரிசுவான் உதுமான் தலைமையின் கீழ், தொழில்புரட்சி 4.0 சவால்களை சந்திக்கும் இயலும் பட்டதாரிகளை உருவாக்கும் தயார் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது.

4.0 தொழில் புரட்சியின் சவால்களை  எதிர்கொள்ளும், அனைத்துக் கோணங்களிலும் தயார் நிலையில் உள்ள மாணவர்களை உருவாக்கும்
முறைகளில்  ஆறு படிகள்  வரையப்படுள்ளதாக பல்கலைக்கழத்தின்  அடிப்படை
அபிவிருத்தி மையத்தின் தலைவர் டாக்டர் ஹம்தான் டத்தோ சாலே தெரிவித்தார்.

முதலாவதாக,போட்டித்தன்மை மற்றும் உள்ளடக்கப்பட்ட முழுமைத்தன்மை  கொண்ட கல்வித் திட்டங்களை உருவாக்க புலங்கள்  ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வேண்டும். இரண்டாவதாக, சிறந்த  கல்விச் சூழலை உருவாக்க,  பெயர்பெற்ற நிபுணத்துவம் கொண்ட பல் துறை மற்றும் பல கல்விக் கூடங்கள் அமைக்கப்படவேண்டும். போட்டித் தன்மையை வலுப்படுத்த பாடத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பயிற்சி மற்றும் தொழில்நுட்பம்  மற்றும்
தொழில் கல்வியை  (TVET) நிறுவ வேண்டும்.மேலும்ஆராய்ச்சிக்கான , 4.0 தொழில் புரட்சியை மையப்படுத்தும்  ஆராய்ச்சி மானியங்களை மேம்படுத்த
வேண்டும் என்று சிலாங்கூர் கினி தொடர்பு கொண்ட போது பேராசிரியர் அம்டான் இவ்வாறு கூறினார்.

பாடத்திட்டத்தில் உருமாற்றத்தைக் கொண்டுவருவது கட்டாயமாகிறது. சோதனையில் கவனத்தைச் செலுத்துவத்தைக் குறைப்பதன் மூலம்  மனிதம் மற்றும் தொழில்
துறையில்  தயார் நிலையில் உள்ள முழுமைப்பெற்ற மனித வளத்தை உருவாக்க முடியும்.

டத்தோ மந்திரி பெசார். பரிந்துரையில் வலியுறுத்தியதைப்போல , தொழில்
புரட்சி  4.0 மிகவும் சவாலானது. இந்தத் தொழில் துறை சவாலை எதிர்நோக்க மனிதம் மற்றும் அறநெறி உட்பட சமச்சீரான மனித வளர்ச்சி  வளர்ச்சி தேவைப்படுகிறது.என்று பேராசிரியர் கூறினார்.

#சரவணன்


Pengarang :