SELANGORUncategorized @ta

#வரவுசெலவு18: பரிவு மிக்க திட்டங்களுக்கு மேலும் ரிம 200,000 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும்

ஷா ஆலம், நவம்பர் 4:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் பரிவு மிக்க சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் கூடுதல் ஒதுக்கீடாக ரிம 200,000-ஐ நேற்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தார். சட்ட மன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாமல் சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற  ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று விவரித்தார்.

மருத்துவ உதவி நிதி, சமூக நல உதவி, அடிப்படை உணவு பொருட்கள்  மற்றும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றிற்கு இந்த சிறப்பு நிதியை பயன்படுத்தலாம் என்று அஸ்மின் அலி கூறினார்.

 

 

 

 

” கிராமத்து நடவடிக்கை குழுவிற்கு வருடாந்திர மானியம் ரிம 10000-இல் இருந்து ரிம 20000 ஆக உயர்த்த நான் பரிந்துரை செய்கிறேன். இதன் மூலம் 371 பாரம்பரிய கிராமத்து நடவடிக்கை குழுக்கள் மற்றும் 78 புதிய கிராமத்து நடவடிக்கை குழுக்கள் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த இது வழி வகுக்கும்,” என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நேற்று வரவு செலவுத் திட்டத்தை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யும் போது பலத்த கரவொலி இடையே தெரிவித்தார்.

மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 53.2% மேம்பாடு திட்டங்களுக்கும் 46.8% நிர்வாக செலவுகளுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளது. 2018-இன் மொத்த வரவு செலவுத் தொகை ரிம 3.13 பில்லியன் ஆகும்.

#வீரத் தமிழன்


Pengarang :