ECONOMYNATIONALRENCANA PILIHAN

மாற்று பொருளாதார நடவடிக்கை இனங்களுக்கிடையிலான பொருளாதார இடைவெளியைக் குறைக்காது – எம்டிஇஎம்

கோலாலம்பூர், ஆக.2-

இன பேதமில்லாமல் குறைந்த வருமானம் பெறும் 40 விழுக்காட்டு மக்களை (பி40) வளப்படுத்தும் நடவடிக்கையால் அத்தரப்பினர் பயனடையக்கூடும் ஆனால் இது இனங்களுக்கிடையிலான பொருளாதார இடைவெளியைக் குறைக்காது என்று மலாய் பொருளாதார நடவடிக்கை மன்றம் (எம்டிஇஎம்) கூறியது.

காலணித்துவ பொருளாதார முறை காரணமாக அதிக சாதகங்களைப் பெற்றுள்ள தரப்பினரையும் உட்படுத்தும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையில் இன விகிதாச்சாரம் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட தரப்பின் செல்வ நிலை தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இது நாட்டில் ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்தும் என்று எம்டி இஎம் தெரிவித்தது.

புதிய பொருளாதார கொள்கையானது நடப்புச் சூழலுக்கு ஏற்புடையதல்ல என்பதால் இன ரீதுயாக இல்லாமல் தேவை அடிப்படையில் கொள்கை வரையப்பட வேண்டும் என்று அண்மையில் பிகே ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் கூறியிருந்தது மலாய் சமூகத்தினருக்கும் தங்களது அமைப்பிற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எம்டிஇஎம் கூறியது.
புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்தில் சில பல்வீனங்கள் இருப்பதை எம்டி இ எம் உணர்ந்துள்ளது. ஆயினும் முன்னாள் பிரதமர் பரிந்துரைத்த திட்டத்தை இனரீதி பாராமல் அம்ல்படுத்துவது என்பது தவறாகும் என்றும் அது வலியுறுத்தியது.


Pengarang :