ECONOMYPBT

கிள்ளானில் சந்தைகளை மீண்டும் திறக்கக் கோவிட் 19 நோய் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

கிள்ளான் 30 செப்- கிள்ளானில் கோவிட் 19 நோய் தொற்று மிரட்டல் உள்ளவரை இரவு மற்றும் காலைச் சந்தைகள் (பாசார்) மூடியே இருக்கும். நேற்று இம்மாநிலத்தில் உறுதி படுத்த பட்ட 15 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களில் 3 கிள்ளானில் பீடித்துள்ளது.
அதில் ”சபா பெந்தேங் பி.கே வகை தொற்று” ஒரு கள்ளக் குடியேறியிடம் தோன்றியுள்ளது,
கிள்ளானில் சந்தைகளை மீண்டும் திறக்க அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிலைமை அணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்றார் கிள்ளான் நகராண்மைக்கழக தலைவர் டாக்டர் அமாட் பட்சில் அமாட்  தாஜூடின்.
நேற்று முன்தினம் சுங்கை பூலோ மருத்துவமனையில் சுகாதார அமைச்சு அடையாளம் கண்ட ” ஜாலான் அபாஸ் வகை தொற்று” சபா தாவாவ் மற்றும் சம்பூர்ணப் பகுதிகளுக்கு வருகையளித்த ஒரு கணவன் மனைவி ஜோடிக்குத் தொற்றியுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. கிள்ளானில் ஏற்பட்ட பாதிப்புகள் சபாவிலிருந்து வந்தவர்களின் வழி ஏற்பட்டதால், சுகாதார அமைச்சு அதிகக் குழப்பமடையத் தேவை இல்லை என  டாக்டர் அமாட் பட்சில் அமாட்  தாஜூடின் தெரிவித்தார்

Pengarang :