ECONOMYNATIONALSELANGOR

சிறு-நடுத்தர வணிகர்களுக்கு உதவ  சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தின் வழி வெ. 7.5 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 2- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவ சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தின் வழி 7 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்தில் போட்டியிடும் ஆற்றலை மேம்படுத்துவதையும் இந்த இக்கட்டான சூழலிலிருந்து  நிறுவனங்களும் தொழிலாளர்களும் காப்பாற்றப்படுவதையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடும் சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் பொருளாதார சூழற்சிக்கு இந்த ஏழரை கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு துணை புரியும். இது தவிர பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்காக சுற்றுப்பயணிகளுக்கு பற்றுச் சீட்டு வழங்குவது சிலாங்கூர் கூ மற்றும் சிலாங்கூர் இடாமான் வீடமைப்புத் திட்டங்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

மக்களின் போட்டியிடும் ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசு இ-பசார், இ-டாப்போர், சிலாங்கூர் கெர்ஜாயா, ரோடா டாருள் ஏசான், ராக்கான் டிஜிட்டல் உள்பட பல்வேறு உதவித் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் புக்கிட் லஞ்சான் உறுப்பினர் எலிசபெத் வோங், பொருளாதார- த்திற்கு உத்வேகம் அளிப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மந்திரி புசார் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறு மற்றும் நடுத்தர  வணிகர்களுக்கு உதவும் வகையில் ரொக்க நிதியளிப்பை மையப் படுத்திய 10 பத்து கோடி வெள்ளி ஒதுக்கீட்டைக் கொண்ட சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தை மாநில அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.

 

 


Pengarang :