NATIONALPBTSELANGOR

சிலாங்கூரில் கோவிட்-19 நோய் அதிகரிப்பு- நோய்த் தடுப்பு பணிக்குழு கவலை

ஷா ஆலம், நவ 18- இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல் கோவிட்-19 நோய்ப் பரவலின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருவது குறித்து சிலாங்கூர் மாநில கோவிட்-19 நோய்த்  தடுப்பு பணிக்குழு கவலை தெரிவித்துள்ளது.

இம்மாதம் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சிலாங்கூரில் 1,485 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அந்த பணிக்குழு கூறியது.

இவற்றில் 1,478 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த சம்பவங்களின் எண்ணிக்கை 1,109ஆக மட்டுமே இருந்தது என்று அது  தெரிவித்தது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. இது கவலையைத் தரும் விஷயமாகும் என அந்த  பணிக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

கூடல் இடைவெளியைக் கடைபிடித்தல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், முக கவசம் அணிதல் போன்ற நிர்ணயிக்கப்பட்ட செயலாக்க நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதன் வழி இந்நோய்ப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் எனவும் அந்த அமைப்பு கூறியது.


Pengarang :