SELANGORWANITA & KEBAJIKAN

சிலாங்கூரில் குடும்ப வன்முறையை தடுக்க சிறப்பு பணிக் குழு

ஷா ஆலம், நவ 22- குடும்ப வன்முறையை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கிய பணிக் குழுவை சிலாங்கூர் மாநில அரசு அமைத்துள்ளது.

சிந்தனையாளர்கள் குழுவாக செயல்படக்கூடிய இந்த குடும்ப வன்முறை தடுப்பு ஒருங்கிணைப்புக் குழு,  விவேக பங்காளித்-துவத்தின் மூலம் செயல் திட்டங்களை வரையும் என்று மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

அதேசமயம், இத்தகைய குற்றச் செயல்களை தடுப்பதற்கும் அதன் தொடர்பான கருத்துக்களை பெறுவதற்கும் ஏதுவாக இக்குழு இயங்கலை வாயிலாக பல்வேறு கருத்தரங்குகளை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் குடும்ப வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 80 விழுக்காடு அதிகரித்துள்ளது என்ற சிலாங்கூர் மாநில சமூக நலத்துறையின் புள்ளி விவரம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இந்த அதிகரித்து காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குடும்ப வன்முறையை தடுப்பதில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பையும் உரிய பங்களிப்பையும் வழங்குவர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக அவர், சமூக நலத்துறை, சிலாங்கூர் சுகாதார இலாகா, ஷரியா நீதித்துறை, காவல் துறை, அரசு சாரா இயக்கங்கள் உள்பட 46 அமைப்புகள் பங்கு கொண்ட குடும்ப மீதான வட்ட மேசை மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். இந்த மாநாடு இயங்கலை வாயிலாக நடைபெற்றது.


Pengarang :