ECONOMYPBTSELANGOR

சிலாங்கூர் கூ வீடுகளுக்கான நிபந்தனை மாற்றத்தின் வழி மேலும் 30,000 வீடுகள் நிர்மாணிப்பு

ஷா ஆலம், நவ 22- சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தில் ஏ,பி,சி,டி மற்றும் ஈ பிரிவு வீடுகளுக்கான நிபந்தனை மாற்றத்தின் வழி மேலும் 30,000 வீடுகளைக் கட்டுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிலாங்கூர் கூ திட்டத்தில் மேலும் முப்பதாயிரம் வீடுகள் கட்டப்படும் என அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்  வழி அடுத்த மூன்றாண்டுகளில் அறுபதாயிரம் வீடுகளை கட்டுவதற்கான சாத்தியம் உண்டாகியுள்ளது.

இந்த நிபந்தனை மாற்றத்தின் வழி 1,000 சதுர அடி பரப்பில் 250,000 வெள்ளிக்கும் மேற்போகாத விலையில் சிலாங்கூர் கூ இடாமான் மற்றும் ஹராப்பான் வீடுகளைக் கட்டும் பணிகளை மேம்பாட்டாளர்கள் துரிதப்படுத்த இயலும் என கருதப்படுகிறது.

அடுத்த ஈராண்டுகளுக்கு இத்தகைய வீடுகளைக் கட்டுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஜோஹாரி அகமது கூறினார்.

வரும் 2022 டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ள அந்த வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என மேம்பாட்டாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேம்பாட்டாளர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்ட பணிக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதலுக்காக மாநில ஆட்சிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :