ECONOMYNATIONALSELANGOR

நீரை மாசுபடுத்துவோருக்கு கடும்  தண்டனை வழங்க வகை செய்யும் லுவாஸ் சட்டத்திருத்தத்திற்கு சுல்தான் ஒப்புதல்

ஷா ஆலம், டிச 8- நீரை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய சட்டத்திற்கு (லுவாஸ்) மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.

சுல்தானின் ஒப்புதலைத் தொடர்ந்து லுவாஸ்  மசோதா உடனடியாக சட்டமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. நீர் மாசுபடுவதற்கு காரணமானவர்கள் மீது இனி இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்  துய்மைக்கேட்டுப் பிரச்னையை உடனடியாக கண்டு பிடித்து நீர் விநியோகத்திற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தீர்வு கண்ட லுவாஸ் மற்றும் ஆயர் சிலாங்கூர் பணியாளர்களுக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நீரை மாசுபடுத்துவோருக்கு கட்டாயச் சிறைத்தண்டனை மற்றும் பத்து லட்சம் வெள்ளி வரையில் அபராதம் விதிக்க வகை செய்யும் லுவாஸ் சட்டத்திருத்த மசோதாவை சிலாங்கூர் சட்டமன்றம் கடந்த மாதம் 9ஆம் தேதி அங்கீகரித்தது.

நீர் மாசுபாடு சம்பவம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையம் நேற்று இரவு 11.30 மணிக்கும் சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தின் 1,2 மற்றும் 3வது நிலையங்கள் பின்னிரவு 1.00 மணியளவிலும் மூடப்பட்டன.

எனினும், அந்த நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களும் விடியற்காலை 3.30 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது. 


Pengarang :