NATIONALPBTSELANGOR

சிலாங்கூரில் டிங்கி எண்ணிக்கை 36 விழுக்காடு குறைந்தது

ஷா ஆலம், டிச 8- சிலாங்கூரில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் 47வது வாரத்தில் 43,215ஆக பதிவானது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 67,000 ஆக இருந்தது.

இவ்வாண்டில் அந்த நோய் கண்டோர் எண்ணிக்கை  36.1 விழுக்காடு அதாவது 24,385 சம்பவங்களாக குறைந்துள்ளதை இந்த புள்ளி விபரம் காட்டுவதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி ஙடிமான் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் பெட்டாலிங் மாவட்டத்தில் 15,040 சம்பவங்களும் உலு லங்காட் மாவட்டத்தில் 9,442 சம்பவங்களும் கிள்ளானில் 6,818 சம்பவங்களும் கோம்பாக்கில் 6,390 சம்பவங்களும் சிப்பாங்கில் 2,353 சம்பவங்களும் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.

மரண எண்ணிக்கையும் 31.5 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்தாண்டில் 54ஆக இருந்த மரண எண்ணிக்கை இவ்வாண்டில் 37 பேராக குறைந்துள்ளது என்றார் அவர்.

வீட்டின் சுற்றுப்புறங்களை நீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்வதன் மூலம் ஏடிஸ் கொசுக்கள் பரவலை தடுக்க உதவும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :