ECONOMYNATIONALSELANGOR

ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் மற்றத் தேவைகளை  நிர்வகிக்கப் போதிய வருமானம்  இருக்க வேண்டும் .

கோலாலம்பூர், டி.ச 16: சொத்து சந்தை சூழல் காரணமாக எந்தவொரு இறுதி முடிவும் எடுப்பதற்கு முன் கவனமாகச் சுய வரவு\ மற்றும்  செலவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என வீட்டை வாங்க விரும்புவோருக்கு மலேசியச் சொத்து குரு என்ற சொத்து வணிக நிறுவன இணையதளம் ( போர்டல்) நினைவூட்டுகிறது.

சொத்துகள் விற்பனைகள் குறித்து,  தற்போது பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளுடன்  தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அந்நிறுவனத்தின்  மலேசிய மேலாளர் ஷெல்டன் பெர்னாண்டஸ், சம்பந்தப்பட்டவர்கள் சொத்து உரிமையின் விலையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், வீட்டின், குடும்பத்தின் மற்றச் செலவுகளை நிர்வகிக்கும்  வருமான ஆற்றலையும்  பெற்றிருப்பதை  உறுதிப்படுத்திக்கொண்டு சொத்துகளை வாங்குவது  சிறந்தது என்றார் .

“ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சொத்து வாங்குபவர்கள்   அப்பொழுது அவர்களின்  வலுவான நிதி நிலையை மட்டும்  கவனத்தில்  எடுத்துக் கொள்ளாமல்  எதிர்கால வருமானப் பாதுகாப்பு குறித்து நம்பிக்கையுள்ளவர்களாக இருத்தல் அவசியம்  என்றார்.

“அத்தகைய நிலையில் இருப்பவர்கள் தற்போதைய சொத்துரிமை சந்தையில்  பல்வேறு  கவர்ச்சிகளை அனுபவிக்க  முடியும் என்று ஒரு அறிக்கையில் அவர் இன்று தெரிவித்தார்.

இவ் ஆண்டு, ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன. பேங்  நெகாரா மலேசியா (பிஎன்எம்) நிதி ஸ்திரத்தன்மை கணக்கெடுப்பு – முதல் அரை ஆண்டின் 2020 நிலவரப் படி, ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் குறைந்தது 25 சதவீதம் குறைந்துவிட்டன.

எவ்வாறாயினும், ரியல் எஸ்டேட் சந்தை எதிர்பார்த்ததை விடக் குறைவான பரிவர்த்தனைகளால்  தொடர்ந்து பின்னடைவின் அறிகுறிகளைக் காட்டுவதாகப் பெர்னாண்டஸ் கூறினார். இது அரசாங்கத்தால் செயல் படுத்த பட்டப்  பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன் முயற்சிகளால்  வீழ்ச்சியின் தாக்கம் ஓரளவு  கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

வரலாற்றில் மிகக் குறைந்த வட்டி விகிதங்கள்,சொத்துரிமை நிறுவனங்களின் வன்மையான பிரச்சார யுக்தி, வாங்குவோருக்க வழங்கப்படும் சில சலுகைகள், ரியல் எஸ்டேட் விற்பனையாளர்களிடையே  நிலவும் கடுமையான போட்டி ஆகியவை இதில் அடங்கும்.

மலேசியச் சொத்து குரு நிறுவனத்தின்  பயனீட்டாளர்கள்  உணர்வுக் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 57 சதவீதம் பேர் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு வீட்டைச் சொந்தமாக்க விரும்புவதாகப்   பதிவிட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு ஆறு பேரில் ஒருவர் அதை ஒத்திவைக்கத் திட்டமிட்டதாகவும் அவர் கூறினார்.

“பல மலேசியர்கள்  அடுத்த  ஆண்டு தங்கள் சொந்த வீடுகளைப்  பெறத்  திட்டமிட்டு-ள்ளதால், இந்த முயற்சியை மேலும் மேம்படுத்த உதவும் பல முக்கிய  அணுகு முறைகள்  இருக்கும். இதில்  பொருளாதாரச் சூழல், அரசு மற்றும் சொத்து மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை அடங்கும்,” என்று அவர் கூறினார்.

 


Pengarang :