ECONOMYNATIONALSELANGOR

வெளிநாட்டு தொழிலாளர்கள் விட்டுச்செல்லும் துறைகளில் உள்ளூர்வாசிகளுக்கு வேலை

கோலாலம்பூர், டி.ச 17: வெளிநாட்டு தொழிலாளர்கள் விட்டுச்செல்லும்  கட்டுமான, வேளாண்மை மற்றும் தோட்டத் துறைகளில் உள்ளூர்வாசிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளைத் திறப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருவதாக மனிதவள துணை அமைச்சர் அவாங் ஹாஷிம் தெரிவித்தார். 

இத்துறைகளில் உள்ளூர் மனிதவளத்தின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகள் நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும்,  MYFutureJobs போர்ட்டலில் காலியிடங்களை விளம்பரப் படுத்துமாறு முதலாளிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியதாக அவர் கூறினார். 

தற்காலிக வேலை விசிட் பாஸ் (பி.எல்.கே.எஸ்) வைத்திருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக இது நிகழ்ந்ததாகவும், அன்னிய தொழிலாளர்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கோவிட் -19 நோய் தொற்றின் காரணமாக மலேசியா திரும்பவில்லை என்றும் அவர் கூறினார். 

கட்டுமானத் துறைக்கான பி.எல்.கே.எஸ் வைத்திருப்பவர்கள் 2020 மார்ச் மாதத்தில் மொத்தம் 406,369 பேரைப் பதிவு செய்துள்ளனர், ஆனால், அந்த எண்ணிக்கை 2020 நவம்பரில் 337,426 பேராகக் குறைந்துள்ளது. 

“வேளாண்மை மற்றும் தோட்டத் துறைக்கான பி.எல்.கே.எஸ் வைத்திருப்பவர்கள் 2020 மார்ச் மாதத்தில் மொத்தம் 143,348 பேரைப் பதிவு செய்துள்ளனர், 2020 நவம்பரில் 111,140 பேராகக் குறைந்துவிட்டனர்” என்று செனட்டர் நூரிடா மொஹமட் சல்லேவின் கேள்விக்கு பதிலளித்த அவர்,  நாட்டின் கட்டுமான, வேளாண்மை மற்றும் தோட்டத் துறையில் உள்ளூர் தொழிலாளர்களின் சதவீதம் அதிகரிப்பது குறித்து பதிலளித்தார். கட்டுமானத் துறையில் மொத்தம் 6,803 உள்ளூர் தொழிலாளர்கள் காலியிடங்களை நிரப்பியுள்ளதாக அவாங் தெரிவித்தார்


Pengarang :