ECONOMYSELANGORYB ACTIVITIES

தொலைத்தொடர்பு உபகரணங்களை தொழில் முனைவோர் வாங்க கடன் திட்டம்

சபா பெர்ணம், டிச 22: யாயசான் ஹிஜ்ரா சிலாங்கூர், (ஹிஜ்ரா) மாநிலத்தில் அதிக டிஜிட்டல் தொழில் முனைவோரை உருவாக்கத் தொலைத்தொடர்பு உபகரணங்கள் போன்றவைகளை அவர்கள் வாங்குவதற்கான கடன் திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

பல டிஜிட்டல் தொழில் முனைவோர் தொலைதொடர்பு உபகரணங்களின்றி உள்ளனர், அவர்களுக்கு அதற்கான கடன்களை ஹிஜ்ரா வழங்கி உதவும் என்றார். சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் அடுத்த ஆண்டு முதல் இவ்வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்

தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்ற உபகரணங்கள் மட்டுமல்லாமல், மின்-பணப்பையை செலுத்தும் முறைகள் மற்றும் ஆன்லைன் விற்பனை முறைகளையும் உருவாக்க நாங்கள் உதவ முடியும்.

தொழில்முனைவோர் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி மாநில அரசு முன்னேறி வருவதால், இந்தக் கடன் திட்டத்தின் மூலம் நாங்கள் அவர்களுக்கு உதவுவது அவசியம், அதன் செயல் முறைகள் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்போம் என்று தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக ரோட்சியா இஸ்மாயில் சிலாங்கூர்கினியிடம் நேற்று கெம்பரா சக்சஸ் நிகழ்வின் போது ஒரு வணிக நிறுவனத்திற்கு வந்த பொழுது கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ரோட்சியா, அடுத்த ஆண்டு மேலும் 5,000 தொழில் முனைவோரை உருவாக்க ஹிஜ்ரா இலக்கு வைத்துள்ளது என்றார். கோவிட் -19 இன் போது ஹிஜ்ரா கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.
இது தொழில் முனைவோர் மிகவும் கவனமாக இருப்பதைக் காட்டுகிறது. இப்பொழுது பல தொழில் முனைவோர் ஆன்லைன் விற்பனைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


Pengarang :