MEDIA STATEMENTNATIONALSELANGOR

பிப்ரவரி மாதம் 32 முதியோர் இல்லங்களில் இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், மார்ச் 6- சிலாங்கூர் அரசின் கோவிட்-19 சமூக பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக கடந்த மாதம் மாநிலத்தில் உள்ள 32 முதியோர் இல்லங்களில் இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதோடு மட்டுமின்றி, மாநிலத்தின் எட்டு இடங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பரிசோதனை இயக்கங்களின் மூலம் 3,458 பேர் பயன்பெற்றதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த இலவச பரிசோதனை இயக்கம் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அந்த பரிசோதனை இயக்கம் நடைபெறும் இடம் மற்றும் தேதி தொடர்பான விபரங்கள் எனது சமூக ஊடகங்கள் மற்றும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக் குழு வாயிலாக பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சிலாங்கூர்  மாநில அரசு  60 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

கடந்தாண்டில் தொடங்கப்பட்ட இவ்வியக்கத்தின் வாயிலாக சுமார் 50,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நோய்த் தாக்கத்திற்கான சாத்தியம் அதிகம் கொண்ட குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் மற்றும் மாணவர்கள் இத்திட்டத்தில் இலக்காக கொள்ளப்பட்டுள்ளனர்

Pengarang :