ECONOMYSAINS & INOVASISELANGOR

முட்டைகளை மீட்க உத்தரவு- சிங்கப்பூரின் நடவடிக்கையை சிலாங்கூர் ஆராயும்

ஷா ஆலம், மார்ச் 15– கோல சிலாங்கூர் ஜெரம் நகரிலுள்ள நிறுவனம் ஒன்று ஏற்றுமதி செய்த முட்டைகளை சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளும்படி தனது நாட்டின் நான்கு முட்டை இறக்குமதியாளர்களுக்கு சிங்கப்பூர் உத்தரவிட்ட விவகாரத்தை சிலாங்கூர் அரசு ஆராயவுள்ளது.

இவ்விவகாரம் இருநாடுகளைச் சம்பந்தப்பட்டுத்தியுள்ளதால் இது குறித்து முன்கூட்டியே முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இங்குள்ள செக்சன் 25. தாமான் ஸ்ரீ மூடா சந்தையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோல சிலாங்கூர் ஜெரம் நகரிலுள்ள நிறுவனம் ஒன்று ஏற்றுமதி செய்த முட்டைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளும்படி சிங்கப்பூர் அரசாங்கம் நான்கு இறக்குதியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

பச்சையாகவோ பகுதி வேக வைத்தோ சாப்பிட்டால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய செல்மினேல்லா எண்ட்ரிடிஸ் எனும் கலவை அந்த முட்டையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் உணவு நிறுவனம் தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.


Pengarang :