ECONOMYSELANGOR

கிள்ளானில் காலை, இரவுச் சந்தைகளில் எஸ்.ஓ.பி. விதிமுறை கடுமையாக்கப்படும்

கிள்ளான், மார்ச் 16- கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காலை மற்றும் இரவுச் சந்தைகளில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கிள்ளான் நகராண்மைக்கழம் கடுமையாக்கவுள்ளது.

சந்தைகளுக்கு வருவோரில் சிலர்  நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகராண்மைக்கழகத் தலைவர் டாக்டர் அகமது பாட்சில் அகமது தாஜூடின் கூறினார்.

இத்தகைய விதிமீறல்கள் தொடர்ந்த நடைபெறாமலிருப்பதை உறுதி செய்ய அமலாக்க மற்றும் சுகாதாரப் பிரிவுகளைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் அங்கு திடீர் சோதனைகளை மேற்கொள்வர் என்று அவர் சொன்னார்.

எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமற்றது என்ற மக்களின் அலட்சிய மனோபாவத்தை இத்தகைய கடும் நடவடிக்கைகள் மாற்றும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கிள்ளான் வட்டாரத்தில் 58 காலை இரவுச் சந்தைகளும் 14 காலைச் சந்தைகளும் நடைபெறுகின்றன. 


Pengarang :