ECONOMYSELANGOR

நன்னீர் மீன் வளர்ப்பில் சிலாங்கூர் அரசு தீவிரம்- ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் தகவல்

பெஸ்தாரி ஜெயா, ஏப் 4– மீன்களின் தேவைக்கு பிற மாநிலங்களைச்   சார்ந்திருப்பதை தவிர்க்க நன்னீர் மீன் வளர்ப்புத் துறையில்  சிலாங்கூர் மாநில அரசு தீவிரம் காட்டவுள்ளது.

சிலாங்கூர் மாநிலம் அதிக அளவில் குளங்களையும் ஏரிகளையும் கொண்டுள்ளதால்  நன்னீர்  மீன் வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியம் இங்கு அதிகம் உள்ளதாக நவீன விவசாயம் மற்றும் அடிப்படைத் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அயிரை மீன், கெளுத்தி மீன், தலாப்பியா விறால் மீன் உள்ளிட்ட கடல் வகை சாராத மீன்களை இந்த நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்தில் வளர்க்கலாம் என அவர் சொன்னார்.

தற்போது 30 விழுக்காட்டு நன்னீர் மீன்கள் மட்டுமே மாநிலத்தில் கிடைக்கும் வேளையில் எஞ்சிய  மீன்கள் பிற மாநிலங்களிலிருந்து பெறப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நன்னீர் மீன்களை வளர்ப்பதற்கு ஏற்புடையதாக நீரின் தன்மை உள்ளதா என்பதை கண்டறிவதற்காக மாநில அரசு பல்வேறு துறையுடன் இணைந்து ஆய்வினை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 


Pengarang :