ECONOMYSELANGOR

சுற்றுச்சூழலை பாதுகாக்க 10,000 மறுபயனீட்டு பைகள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 5- பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பைகளின் பயனீட்டைக் குறைப்பதற்காக மறுபடியும் பயன்படுத்தக்கூடிய பத்தாயிரம் பைகள் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படும்.

நெகிழிப்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் சுற்றுச் சூழலின் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பயனீட்டார் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

இந்த மறுபயனீட்டுப் பைகளை விநியோகிக்கும் பணி கோல சிலாங்கூரில் தொடங்கப்பட்டு பின்னர் கிள்ளான் மற்றும் இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த இயக்கத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மதிப்பீடு செய்யப்படும். ஆதரவு வரவேற்கத்தக்க வகையில் இருக்கும் பட்சத்தில் பைகளின் விநியோகம் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.

இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயக்கம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பொதுமக்கள் பொருள்களை வாங்க கடைக்கும் செல்லும் போது இந்த பைகளை உடன் கொண்டுச் செல்லும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

நெகிழிப்பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் மிரட்டலாக விளங்குகின்றன. குறிப்பாக கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் நீரோட்டம் தடைப்படுவதற்கு இந்த நெகிழிப்பைகள் காரணமாக விளங்குகின்றன. இதனால் வெள்ளப் பிரசனையையும் நாம் எதிர்நோக்க வேண்டி வருகிறது என்றார் அவர்.


Pengarang :