ECONOMYSELANGORYB ACTIVITIES

கோல சிலாங்கூரில் உள்ள 150 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் உதவி

ஷா ஆலம், ஏப் 18– நோன்புப் பெருநாளின் போது ஏற்படக்கூடிய பொருளாதார சுமையைக் குறைக்கும் விதமாக  கோல சிலாங்கூரில் உள்ள 150 வசதி குறைந்த பி40 குடும்பங்களுக்கு புக்கிட் மெலாவத்தி தொகுதி சார்பில் அத்தியாசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட அத்தரப்பினருக்கு அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் போன்ற பொருள்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி விநியோகிக்கப்பட்டு வருகினறன.

இந்த உணவு உதவித் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். கடந்த மாதம் கூட 100 மீனவர்கள் உள்பட 200 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது. இம்மாதம் ரமலான் மாதமாக விளங்குவதால் விவசாயிகளையும் இத்திட்டத்தில் இணைத்துள்ளோம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

நோய்த் தொற்று பரவல் காலத்தில் வேலை இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளால்  மக்கள் கடுமையான நிதிப் பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றனர்.  அவர்களின் சுமையைக் குறைப்பதில் இந்த  உணவு உதவித் திட்டம் ஓரளவு உவும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

வசதி குறைந்தவர்கள்  மற்றும் ஆதரவற்ற சிறார்களை இலக்காக கொண்டு இந்த உணவு உதவித் திட்டம் தொடர்ந்து  மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :