MEDIA STATEMENTNATIONAL

95 விழுக்காட்டு முன்களப் பணியாளர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்

மலாக்கா, ஏப் 20- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 95 விழுக்காட்டு முன்களப் பணியாளர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அனைத்து 571,000 முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி இம்மாத இறுதிக்குள் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுன் கூறினார்.

மலாக்காவை பொறுத்தவரை அனைத்து முன்களப் பணியாளர்களும் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள நிலையில் இரண்டாவது தடுப்பூசியைப் பெறுவதற்கு காத்திருப்பதாக அவர் சொன்னார்.

இங்குள்ள புக்கிட் கட்டில், துன் அலி தடுப்பூசி மையத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இரண்டாவது தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளன்று முன்பதிவு செய்த 540 பேரில் 528 பேர் தடுப்பூசியைப் பெற்றதாக  அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :