ECONOMYSELANGOR

சிலாங்கூர் இல்லத்தரசிகள் கண்காட்சிக்கு வெ. 400,000 மானியம்

ஷா ஆலம், ஏப் 27- வரும் புதன் கிழமையுடன் முடிவடையும் ஐந்து நாள் சிலாங்கூர்  இல்லத்தரசிகள் கண்காட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்கு மாநில அரசு நான்கு லட்சம் வெள்ளியை மானியாக வழங்கும்.

இயங்கலை வாயிலாக நடத்தப்படும் 830 வகையான பொருள்களை உள்ளடக்கிய இந்த  விற்பனையின் வழி சம்பந்தப்பட்ட இல்லத்தரசிகளின் வருமானம் பெருகுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு எதிர்பார்க்கிறது.

கடந்த சனிக்கிழமை தொடங்கியது முதல் இந்த கண்காட்சியை இணையம் வாயிலாக சுமார் முப்பதாயிரம் பேர் பார்த்துள்ளனர். இந்த கண்காட்சிக்கு நல்ல அறிமுகமும் பொதுமக்களுக்கு பொருள்கள் மீதான ஈடுபாடும் ஏற்பட்டுள்ளதை இது புலப்படுத்துகிறது மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

பொதுமக்கள் நேரில் கலந்து கொள்ளும் வகையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் ஐயாயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆயினும் இம்முறை இயங்கலை வாயிலாக நடத்தப்படும் இந்த கண்காட்சி அதிகானோரை ஈர்த்துள்ளது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தின் கீழ்த்தளத்தில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு வருகை புரிந்தப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :