ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பொது முடக்கம்- பெ.ஜெயாவில் 4 இடங்களில் சாலைத்  தடுப்புச் சோதனை

கோலாலம்பூர், மே 6– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தைத் தொடர்ந்து நான்கு இடங்களில் நிலையான சாலைத் தடுப்பூச் சோதனை நடவடிக்கைகளை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசார் மேற்கொள்ளவுள்ளனர்.

சுங்கை பூலோ டோல் சாவடி, கோத்தா டாமன்சாரா டோல் சாவடி, டாமன்சாரா டோல் சாவடி மற்றும் சுபாங் டோல் சாவடி ஆகிய இடங்களில் அந்த சாலைத் தடுப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

பொது முடக்க அமலாக்க காலத்தில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய கூடுதல் போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் அதேவேளையில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்துடன் இணைந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் முயற்சி  வெற்றியடைவதை உறுதி செய்ய பொது மக்களும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இன்று தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் பெட்டாலிங் மாவட்டமும் ஒன்றாகும்.


Pengarang :