ECONOMYHEALTHNATIONALSELANGOR

குவாங் தொகுதியில் இலவச கோவிட்-19 பரிசோதனை- 1,800 பேர் பங்கேற்பு

ரவாங், மே 22- இங்குள்ள குவாங் பல்நோக்கு  மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 1,800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் செலங்கா செயலி வாயிலாகவும் நேரடியாக மண்டபத்திற்கு வந்தும் இந்த இலவச பரிசோதனை இயக்கத்திற்கு பதிவு செய்து கொண்டதாக  கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

குவாங் தொகுதி புறநகர் பகுதியில் அமைந்திருந்தாலும் இங்கு 1,800க்கும் மேற்பட்டோர் இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கேற்றது தங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

நாட்டில் உருமாறிய கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தங்கள் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்றார் அவர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பலர் வீடுகளிலிருந்து வேலை செய்வது இந்த பரிசோதனை இயக்கத்தில் அதிகமானோர் பங்கேற்பதற்கு வாய்ப்பாக அமைந்தது என்று அவர் மேலும் சொன்னார்.

குவாங் தொகுதி தவிர்த்து ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியிலும் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நேற்று நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :