ECONOMYNATIONALSELANGOR

உடல் உஷ்ணம் சோதிக்கும் கருவி இல்லை- 13 வியாபாரிகளுக்கு அபராதம்

ஷா ஆலம், மே 22- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ் ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக  ஸ்ரீ டாமன்சாரா, ஜாலான் மெர்கோடா, காலை சந்தையில் வியாபாரம் புரியும் 13 வணிகர்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டது.

உடல் உஷ்ணத்தை அளவிடும் கருவியை வைத்திராதது மற்றும் மைசெஜாத்ரா ஸ்கேன் இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.

தங்கள் வருகையை பதிவு செய்தாத மற்றும் உடல் உஷ்ணத்தை அளவிடத் தவறிய  இரு வாடிக்கையாளர்களுக்கும் இச்சோதனையின் போது அபராதம் விதிக்கப்பட்டது என்றார் அவர்.

இச்சோதனையின் போது லைசன்ஸ் இன்றி வியாபாரம் செய்த 30 பேருக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரிகள் குற்றப்பதிவுகளை வழங்கியதாகவும் அவர் அவர் சொன்னார்.

Pengarang :