ECONOMYHEALTHPBT

நிரந்தர கோவிட்-19 பரிசோதனை மையத்தை உருவாக்குவீர்- சிலாங்கூர் அரசுக்கு கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, மே 25- பொதுமக்கள் தொடர்ந்து கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நிரந்தர கோவிட்-19 பரிசோதனை மையங்களை உருவாக்கும்படி சிலாங்கூர் அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட-19 பரிசோதனையை மேற்கொள்ள முன்பதிவு செய்தவர்கள் தவிர்த்து  நேரில் செல்பவர்களை சுகாதார கிளினிக்குகள் ஏற்க மறுப்பதை கருத்தில் கொண்டு மாநில அரசு நிலையான சோதனை மையங்களை அமைக்க வேண்டும் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷியாகாரன்  கூறினார்.

மேலும், நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமே சுகாதார கிளினிக்குகளில் பரிசோதிக்கப்படுகின்றனர். அதே சமயம், தனியார் கிளினிக்குகளில் உடனடியாக சோதனையை மேற்கொள்ள வாய்ப்பு இருந்தாலும் அங்கு விதிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளது என்றார் அவர்.

இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிரந்தரமாக கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய இடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். இதன் வழி அதிகமானோர் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

புக்கிட் காசிங் தொகுதியில் நிலையில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோத்னை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :