ECONOMYNATIONAL

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 7,289 ஆக உயர்வு

ஷா ஆலம், மே 25- நாட்டில் இன்று 7,289 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த சில தினங்களாக இச்சம்பவங்களின் எண்ணிக்கை ஆராயிரமாக பதிவாகி வந்த வேளையில் இன்று அதிகப்பட்ச அளவை அது எட்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 6,509 சம்பவங்களும் சனிக்கிழமை 6,320 சம்பவங்களும் வெள்ளிக்கிழமை 6,493 சம்பவங்களும் வியாழக்கிழமை 6,806 சம்பவங்களும் புதன் கிழமை 6,075 சம்பவங்களும் நாட்டில் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 2,642 சம்பவங்களுடன் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் வேளையில் அதனைத் தொடர்ந்து ஜோகூர் (664), கோலாலம்பூர்,(604) மற்றும் சரவா (513) உள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கிளந்தானில் 425 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 410 சம்பவங்களும்  பினாங்கில் 380 சம்பவங்களும் கெடாடவில் 336 சம்பவங்களும் திரங்கானுவில் 268 சம்பவங்களும் சபாவில் 266 சம்பவங்களும் மலாக்காவில் 258 சம்பவங்களும் பகாங்கில் 211 சம்பவங்களும் பதிவானதாக அவர் தெரிவித்தார்.

லபுவானில் 63 சம்பவங்களும் புத்ரா ஜெயாவில் 23 சம்பவங்களும் பெர்சிலிசில் 8 சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்றார் அவர்.


Pengarang :