ECONOMYHEALTHNATIONAL

பொது முடக்கம் – 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி-

கோலாலம்பூர், ஜூன் 1- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்திற்கான மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் மாதம் 2,500 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானத்தைப் பெறுவோருக்கு 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும்.

அதே சமயம், 2,501 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளி வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கு தலா 300 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

இது தவிர, திருமணமாகாத இளைஞர்களுக்கு தலா 100 வெள்ளி வழங்கப்படும். இந்த உதவித் தொகைகள் யாவும் இம்மாதம் இறுதியில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தையொட்டி  210 கோடி வெள்ளி மதிப்பிலான மக்கள் பரிவு உதவித் திட்டத்தை நேற்று தொலைக்காட்சி வழி அறிவித்த போது பிரதமர் இதனைத் குறிப்பிட்டார்.

வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் 24 கோடி வெள்ளி மதிப்பிலான  மக்கள் பரிவுத் திட்டத்தின் இறுதி கட்ட நிதிக்கு உபரியாக இந்த உதவி நிதி அமைவதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :