ECONOMYHEALTHNATIONAL

மீடியா சிலாங்கூர் நிருபர்கள் இன்று தொடங்கி கட்டங் கட்டமாக தடுப்பூசி பெறுவர்

ஷா ஆலம், ஜூன் 23- மீடியா சிலாங்கூர் நிருபர்கள் இன்று தொடங்கி கட்டங் கட்டமாக கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர்.

நிருபர்களுக்கு சினோவேக் தடுப்பூசியை செலுத்தும் பணி ஷா ஆலம், செக்சன் 19 இல் உள்ள தஞ்சோங் எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் காலை 9.00 மணி தொடங்கி மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் வழி  நாடு  முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் தடுப்பூசியைப் பெற்று வருகின்றனர்.

நீண்ட நாட்கள் காத்திருந்தப் பின்னர் தடுப்பூசி பெறுவதற்கான  தேதி கிடைத்தது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக  சிலாங்கூர் கினி செய்திப் பிரிவு துணையாசிரியர் கைருள் அஸ்ரான் (வயது 41) கூறினார்.

பத்திரிகையாளர்கள் என்ற முறையில் நாங்கள் களத்தில் இறங்கி பணியாற்றவும் பலரை சந்திக்கவும் வேண்டியுள்ளது. யாருக்கு நோய்த் தொற்று உள்ளது என்று நமக்கு தெரியாது. தடுப்பூசியைப் பெறும் பட்சத்தில் குறைந்த பட்சம் நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியம் என்று அவர் சொன்னார்.

தடுப்புசி மையத்தில் அனைத்துப் பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படுவது குறித்து தாம் மனநிறைவு கொள்வதாக சிலாங்கூர் கினி நிருபர் முகமது முஸ்தாகிம் ரம்லி (வயது 34) தெரிவித்தார்.

நமக்கு வழங்கப்படும் ஒப்புதல் பாரத்தில் நோய்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் குறிப்பிட வேண்டும். தடுப்பூசியின் விளைவுகளையும் அதனை எதிர் கொள்ள வேண்டிய வழிகளையும் சுகாதார அதிகாரி நமக்கு விளக்குகிறார். 

தடுப்பூசி பெற்ற 15 பின்னர் 15 நிமிடங்களுக்கு கண்காணிப்பு பகுதியில் வைக்கப்பட்டு நமது உடல் நிலை கண்காணிக்கப்படுகிறது. அதன் பின்னரே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறோம் என்றார் அவர்.


Pengarang :