HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மெந்தாரி  கோர்ட் குடியிருப்பாளர்களுக்கு பி.கே.பி.எஸ். 3,500 உணவுப் பொட்டலங்கள் வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 2- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட  பெட்டாலிங் ஜெயா, பிஜேஎஸ் 8இல் உள்ள மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குயிருப்பில் வசிப்பவர்களுக்கு சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் உணவுப் பொருள்களை வழங்கியது.

அரிசி, மாவு, சீனி, சார்டின், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அடங்கிய 3,500 உணவுப் பொட்டலங்கள் அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அதன் தலைமை செயல் முறை அதிகாரி  டத்தோ அப்துல் காரிப் ரமின் கூறினார்.

இந்த உணவுப் பொருள்கள் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட இரண்டு வார காலத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

கடுமையாகக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு  ஆணை அமல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான எங்களின் இரண்டாவது உதவித் திட்டம் இதுவாகும். கடந்த மாதம்  கூடுதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட சபாக் பெர்ணம் மாவட்டத்தின் தாமான் பெர்த்தாமா, தாமான் செரெண்டா, தாமான் பிரிமா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகளை வழங்கினோம் என்றார் அவர்.

மாநில அரசின் உத்தரவைப் பொறுத்து  நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட இதர இடங்களிலும் இத்தகைய உதவிகளை வழங்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது முடக்கத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற வரை உதவி வழங்க  தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நோய்த் தொற்று அதிகரித்த காரணத்தால் மெந்தாரி கோர்ட் குடியிருப்பு பகுதியில் இரு வாரங்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு  ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சுமார் 3,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


Pengarang :