ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஸ்ரீ ஆயு குடியிருப்பில் 118 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி

பாங்கி, ஜூலை 11– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட பண்டார் பாரு பாங்கி, ஸ்ரீ ஆயு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 118 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த 2,332 பேரிடம் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த அடுக்குமாடி பகுதியில் வசிப்போரில் ஏறக்குறைய 100 விழுக்காட்டினர் அருகிலுள்ள மின்னியல் தொழிற்சாலையைச் சேர்ந்த ஊழியர்களாவர் எனக் கூறிய அவர், இப்பகுதியில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டார்.

இப்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

ஸ்ரீ ஆயு குடியிருப்பு பகுதியில்  தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நேற்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்ட வேளையில் எஞ்சியோருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :