HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பி.கே.பி.டி. காலத்தில் பயனீட்டாளர் விவகாரம் தொடர்பில் 236 புகார்கள்

ஷா ஆலம், ஜூலை 15– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலத்தில் பயனீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட  236 புகார்களை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகர அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு பெற்றது.

அவற்றில் 109 புகார்கள் இணைய பரிவர்த்தனை சம்பந்தப்பட்டவை என்றும் எஞ்சியவை எஸ்.ஒ.பி. விதிமுறைகள் (37), குழப்பத்தை ஏற்படுத்தும் சேவை (26) மற்றும் விலை (21) தொடர்பானவை என்றும் அதன் இயக்குநர் முகமது ஜிக்ரி அஸான் அப்துல்லா கூறினார்.

இது தவிர, போலி வர்த்தக நடவடிக்கை, மலிவு விலை விற்பனை, குழப்பத்தை ஏற்படுத்தும் விளம்பரங்கள், நிறுவையில் ஏமாற்று வேலை, வாகன வாடகை கொள்முதல் தொடர்பான புகார்களையும் தாங்கள் பெற்றதாக அவர் சொன்னார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 2,561 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், இச்சோதனை நடவடிக்கைகளில் 200 அமலாக்க அதிகாரிகள் பங்கு கொண்டனர் என்றார்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது அத்தியவசிய  பற்றாக்குறை தொடர்பில் எந்த புகாரும் பெறப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :