ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

இணையத் தரவுக்கு வெ.20 கட்டணக் கழிவு- 2,600 உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறுவர்

ஷா ஆலம், ஜூலை 17– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மூன்று உயர்கல்விக்கூடங்களில் பயலும் சுமார் 2,600 மாணவர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு 20 வெள்ளி கட்டணச் சலுகையுடன் எல்லையற்ற இணையத் தரவு சேவையை மாநில அரசு வழங்குகிறது.

இத்திட்டத்தின் வழி 2,000 யுனிசெல் மாணவர்கள், 500 சிலாங்கூர் அனைத்துலக இஸ்மாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிலாங்கூர் திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மைய மாணவர்களும் பயன்பெறுவர் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் வழி வழங்கப்படும் இந்த வாய்ப்புகளை நேற்று தொடங்கி செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை பெற முடியும் என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.platsselangor.com  அகப்பக்கத்திற்குச் சென்று Inisiatif Bisnes Amal என்ற வார்த்தையை சொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் தேதி தொடங்கி சிம் கார்டுகளைப் பெறுவர். மாணவர்களுக்கு குறிப்பாக வீட்டிலிருந்து கற்றல் கற்பத்தில் நடவடிக்கையை மேற்கொள்வோருக்கு இந்த திட்டம் பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

இத்திட்டத்திற்கு ஒரு கோடியே 75 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும் தகவலை மந்திரி புசார் கடந்த மாதம் கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தை வெளியிட்ட போது அறிவித்தார்.

 


Pengarang :