ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

அக்டோபருக்கு முன்னதாக பல மாநிலங்கள் மீட்சி நிலையின் நான்காம் கட்டத்திற்கு மாறும்- பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 26- வரும் ஆக்டோபர் மாதத்திற்குள் நாட்டிலுள்ள பல மாநிலங்கள் தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு அதாவது இறுதிக் கட்டத்திற்கு மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

அரசாங்கத்தின் மீட்சித் திட்டங்கள் மற்றும் தடுப்பூசி இயக்கம் சீராக நடைபெற்று வருவதன் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக இன்று நடைபெறும் மக்களவையின் சிறப்புக் கூட்டத்தில் தேசிய மீட்சித் திட்டம் தொடர்பில் விளக்கமளித்த போது அவர் தெரிவித்தார்.

மாநிலங்களில் கோவிட்-19 நிலவரங்களை அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாக கண்காணித்து வருவதோடு அடுத்தக் கட்டத்திற்கு மாநிலங்கள் நகர்வதற்கு ஏதுவாக தயார் நிலை மற்றும் இடர் மதிப்பீட்டு நடவடிக்கைகளையும் அது  மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

மீட்சி நிலையின் இரண்டாம் கட்டத்திற்கு மாறிய  மாநிலங்கள் மீண்டும் முதலாம் நிலைக்கு மாறாது என்று தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல் மூன்றாம் கட்டத்திற்கு மாறிய மாநிலங்கள் மறுபடியும் இரண்டாம் கட்டத்திற்கு மாறாது என அவர் தெரிவித்தார்.

தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் நாடு கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கான நான்கு  கட்ட திட்டத்தை பிரதமர் கடந்த மாதம் 15 ஆம்  தேதி அறிவித்தார்.

பிரதமரின் அந்த அறிவிப்புக்குப் பின்னர் பெர்லிஸ், பகாங், கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சபா, சரவா, பேராக் ஆகிய எட்டு மாநிலங்கள் முதலாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு மாறியுள்ளன.


Pengarang :