Ahli Dewan Negeri (ADN) Kajang, Hee Loy Sian (dua dari kanan) melihat proses suntikan vaksin Covid-19 ketika meninjau program Vaksin Selangor (Selvax) Komuniti Dun Kajang di Dewan Sri Cempaka Saujana Impian, Kajang pada 26 Julai 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
HEALTHMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

காஜாங் தொகுதியில் அந்நியத் தொழிலாளர்கள் உள்பட 2,000 பேருக்கு உணவுப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், ஜூலை 27-  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலக் கட்டத்தில் காஜாங் தொகுதியில் சுமார் 2,000 பேருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

பொது முடக்கம் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

வேலை நீக்கம் செய்யப்பட்டது மற்றும் பொது முடக்கம் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமலிருப்பது போன்ற காரணங்களால் பலர் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் காஜாங், ஸ்ரீ செம்பாகாவில் நடத்தப்படும் தடுப்பூசி இயக்கத்தை பார்வையிட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

 வரும் ஆகஸ்டு மாதம் மேற்கொள்ளப்படும் மூன்றாம் கட்ட உணவுப் பொருள் விநியோகத் திட்டத்தின் போது மேலும் ஆயிரம் பேருக்கு உணவுக் கூடைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கும் திட்டத்திற்காக மாநில அரசு அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு லட்சம் வெள்ளியை வழங்கியுள்ளது.

Pengarang :