Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari melihat ikan yang siap dibungkus untuk diagihkan kepada penerima dalam program Serahan Sumbangan Barangan Basah kepada Ketua-ketua Kampung dan Ahli Majlis di Padang Awam Batu Caves, Gombak pada 15 Ogos 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் 50 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

ஷா ஆலம், ஆக 16- சிலாங்கூரில் நேற்று வரை 23 லட்சத்து 60 ஆயிரம் பேர் அல்லது 49.7 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 30 ஆயிரம் பேர் அல்லது 78.6 விழுக்காட்டினராகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இம்மாதம் 15 ஆம் தேதி வரை பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 60 லட்சத்து 90 ஆயிரம் டோஸ் தடுப்புசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

அதே சமயம், செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 292, 026 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

சிலாங்கூரில் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக மாநில அரசு செல்வேக்ஸ் கம்யூனிட்டி மற்றும் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் என இரு தடுப்பூசித் திட்டங்களை அமல்படுத்தியது.

தொழிற்சாலை ஊழியர்களை மையமாக கொண்டு செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகளும் குறைந்த வருமானம் பெறுவோர், மூத்த குடிமக்களை இலக்காக கொண்ட செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்திற்க 5 லட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டன.


Pengarang :