ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

கோலாலம்பூர், ஆக 22: கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓப்ஸ் லைம்ஸ்டோன்  என்ற நடவடிக்கையில் சந்தேகத்தின் வழி நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை தலைவர் ஏசிபி சஹர் அப்த் லத்தீஃப்,  கூறுகையில்  34 முதல் 49 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் தாமான் சிட்டி, செந்தூல், தாமான் மஸ்தியாரா, ஜிஞ்சாங் மற்றும் ஜலான் கிள்ளான் லாமா, பிரிக்ஃபீல்ட்ஸ் மற்றும் தமான் வாங்சா பெர்மை போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட பல சோதனைகளில் கைது செய்யப் பட்டனர்.

சம்பந்தப்பட்ட சிண்டிகேட் மீது மூன்று வாரங்களில் உளவுத்துறை கண்கானித்து வந்ததன் பலன். சோதனையில், 2.01 கிலோகிராம் எடையுள்ள மெத்தாம்பெட்டமின் மற்றும் 2.72 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் ஆகியவற்றை பல இடங்களில் போலீசார் கண்டுபிடித்தனர்.

“கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார் என்றும், அவர்கள் நால்வர் மீதும் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான முந்தைய குற்றவியல் பதிவுகள் உள்ளன” என்றும் அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் கூறினார்.

RM100,000 க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததைத் தவிர, இசுசு டி-மேக்ஸ் வாகனம் மற்றும் ஒரு புரோட்டான் பெர்சனாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மொத்த போதைப்பொருள் கைப்பற்றல்களின் எண்ணிக்கை 9,466 பயனர்களின் பயன்பாட்டிற்கு இடமளிக்கும் என்று சஹார் கூறினார்.

இந்த வழக்கு 12 (2), பிரிவு 15 (1) (a) மற்றும் அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 ன் பிரிவு 39B ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டது


Pengarang :