ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 55 விழுக்காட்டு பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஆக 23- நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில்  55.6 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 30 லட்சத்து 22 ஆயிரத்து 246 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று வரை பதிவான தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத  சிறப்பு பணிக்குழு தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

நேற்று வரை 1 கோடியே 82 லட்சத்து 58 ஆயிரத்து 947 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கூறிய அப்பணிக்குழு, இதன் வழி நாட்டில் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழி 3 கோடியே 12 லட்சத்து 81 ஆயிரத்து 193 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 441,100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் அவர்களில் 303,545 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.


Pengarang :