Adun Kota Anggerik, Najwan Halimi berbincang bersama Ketua Pegawai Eksekutif PKNS Real Estate Sdn Bhd (PREC), Fakru Radzi Ab Ghani pada tinjauan peniaga di Tempat Orang Lokal Kompleks PKNS, Shah Alam pada 17 Mei 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுல்தானின் கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள், மக்களின் முக்கிய நலன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தவிர்ப்பதாகும் 

ஷா ஆலம், 24 ஆக: மாநில அரசு பிரதிநிதிகளும், எதிர்க்கட்சியினரும் நேற்று சிலாங்கூர் சுல்தான் உரையில் குறிப்பிட்டதை வரவேற்று பேசினர்.   சுல்தான் உரையில் குறிப்பிட்டது போன்று   மக்கள் பிரதிநிதிகள் கோவிட் -19 ஐ எதிர்கொள்ளும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்ற அதீத காரியத்தில் ஈடுப்பட கூடாது என்ற சுல்தான் ஷரபுடின் இத்ரிஸ் ஷா அல்ஹாஜின் உத்தரவு தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமானதாக அவர்கள் விவரித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து மாநிலத்தை வெளி கொண்டு வருவதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

“திட்டமிடுவதில் வெற்றிபெற ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்,  மக்கள் பிரதிநிதிகள் அவரவர் தொகுதிகளின் மக்களுக்கு சேவையாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்  என கேட்டுக்கொண்டார் சுங்கை ஆயர் தவார் மாநில சட்டமன்ற உறுப்பினரான அவர்.

கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, மத்திய அரசு அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் கலாச்சாரம் சிலாங்கூருக்கு கொண்டு வரப்படக்கூடாது, ஏனெனில் அது மக்களுக்கு பயனளிக்காது. “மக்கள் நலன் பேணப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள், சிலாங்கூர் அரசாங்கத்தால் தீவிரமாக நடத்தப்படும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்.

“சிலாங்கூரில் நாங்கள் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சித்தாந்தத்தில் உள்ள வேறுபாடுகளை ஒரு பிரச்சனையாக பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார். நேற்று, சிலாங்கூர் சுல்தான் 14 வது சிலாங்கூர் மாநில சட்டசபையின் நான்காவது கால மாநாட்டின் தொடக்க விழாவில் பேசுகையில், அரசியல்வாதிகள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டாம் என்றும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை புறக்கணிக்க வேண்டாம் என்றும் நினைவூட்டினார்.

அதிகாரப் போட்டிகளால் அரசியல் நிலைமை நிலையற்றதாக இருக்கும்போது மக்கள் கஷ்டங்களைச் சகிக்க வேண்டியிருந்தது என நினைவுறுத்தினார்.

 


Pengarang :