Mohd Fakhrulrazi Mohd Mokhtar
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

80 சதவிகிதம் தடுப்பூசி போட்ட அளவை எட்டினால் சிலாங்கூர் இரண்டாம் கட்டத்தில் நுழையும். சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கை

ஷா ஆலம், 25 ஆக: அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை தொடர்ந்து செப்டம்பரில் சிலாங்கூர் தேசிய மீட்சித்  திட்டத்தின் (பிபிஎன்) இரண்டாம் கட்டத்திற்கு செல்ல முடியும் என்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் நம்புகின்றனர்.

ராவாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தடுப்பூசி விகிதம், இப்போது 80 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது, தினசரி தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்றார். “கடந்த சில நாட்களில்,  தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் அனைத்து தரப்பினரும் நிலையான நடமாட்ட கட்டுப்பாடு  நடைமுறைகளை (SOP) கடைபிடிக்க வேண்டும், ஏனெனில் தடுப்பூசி பெற்ற பிறகும் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.

“நாம் SOP ஐ தொடர்ந்து கடைப்பிடித்தால், சில வாரங்களில் சிலாங்கூர் அடுத்த கட்டத்திற்குள் நகரும் என்று நான் நம்புகிறேன்,” என்று சுவா வெய் கியாட் கூறினார்.

மறுபுறம், மேரு சட்டமன்ற உறுப்பினர் கோவிட் -19 இன் ஆபத்துகளை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதன் தாக்கத்தின் தன்மையை உணர்ந்து விரைவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசிகளை பெற வேண்டுமென வலியுறுத்தினார்.

இருப்பினும், முகமட் ஃபக்ருல்ராஸி முகமது மொக்தார் தொற்றுநோயை இரகசியமாக வைத்திருப்பவர்கள்   சிலாங்கூருக்கு ஒரு ‘டைம் பாம்’ ஆக இருக்கிறார்கள் என்று எச்சரித்தார்.நோய் பரிசோதனை செய்யாதவர்கள் குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

“நெகிரி செம்பிலான் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளதை நாம் காண்கிறோம், ஆனால் சிலாங்கூரின் நிலை வேறுபட்டது, ஏனெனில் இங்கு மக்கள் தொகை அடர்த்தி அதிகம், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக வெளிநாட்டவர்களும் உள்ளனர். “நோய்தொற்று குறைவது சீராக இரண்டு வாரங்களுக்கு இருந்தால், அடுத்த சில வாரங்களில் மாற்றம் நடக்கும் என்று  நம்ப லாம்” .

ஆனால் நம் மாநில நிலைமை அப்படியல்ல, ஒரு வாரம் ஏற்றமும் மறுவாரம் இறக்கமுமாக இருப்பது ஏமாற்றம்  அளிக்கிறது என்றார்.

தினசரி கோவிட் -19 வழக்கு 4,000 க்கு கீழ், மிதமான தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை பயன்பாடு மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி விகிதம் 10 சதவீதத்தை அடைவு போன்ற தகுதிகள் VAT தேசிய மீட்சித் திட்டத்தின் (பிபிஎன்) இன் இரண்டாம் கட்டத்திற்கு மாறுவதற்கு ஒரு மாநிலத்திற்கு தேவைபடுகிறது.

 


Pengarang :