Fahmi Fadzil menyampaikan ucapan ketika Konvensyen Penerangan KEADILAN di Hotel De Palma, Ampang pada 26 Julai 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பக்காத்தான் முக்கிய தலைவர்கள் இன்று பிரதமரை சந்தித்தனர்

ஷா ஆலம், 25 ஆக:- பக்காத்தான் ஹரப்பானின் முக்கிய தலைவர்கள் புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பை இன்று பிற்பகல் 2 மணிக்கு சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தின் அழைப்பு என்று பார்ட்டி கெஅடிலன் ராக்யாட்  தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்ஸில் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
"பிற்பகல் 2 மணிக்கு, டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் (கெஅடிலான் தலைவர்), முகமட் சாபு (அமானா தலைவர்) மற்றும் லிம் குவான் எங் (டிஏபி பொதுச்செயலாளர்) ஆகியோருடன் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்புடன் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறும்" என்று அவர் எழுதியிருந்தார். 

முன்னதாக, தேசிய மீட்சி கவுன்சில் (எம்பிஎன்) மற்றும் கோவிட் -19 ஐ சமாளிக்கும் சிறப்பு குழுவில் சேர இஸ்மாயில் சப்ரியின் விருப்பத்தை பக்காத்தான்கூட்டணி பரிசீலிக்கும் என்று  அறிவித்தார்.

தலைமைத்துவ கவுன்சில் ஒரு அறிக்கையில், இந்த பங்கேற்பு அரசாங்கத்தின் பார்வையில் ஒரு ஆமாம் சாமி அல்லது "ரப்பர் ஸ்டாம்ப்" அல்ல, ஆனால் தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார மந்தநிலையை கையாள்வதில் நேர்மையாக செய்யப்படவேண்டும்.

இருப்பினும், இது குறித்து  கூட்டணிக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

Pengarang :