ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

டிக் டாக் வழி செயலி வழி சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த டூரிசம் சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், செப் 7– சிலாங்கூரிலுள்ள பிரபல சுற்றுலாத் தலங்களைப் பிரபலப் படுத்துவதற்கு டிக் டாக் செயலியை பயன்படுத்த மாநில சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பான டூரிசம் சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது.

டிக் டாக் செயலியை பயன்படுத்தும் நடவடிக்கை சுற்றுலாத் துறையை குறுகிய காலத்தில் மீட்சியுறச் செய்வதற்கான சிறந்த அணுகுமுறையாக விளங்குவதாக டூரிசம் சிலாங்கூர் தொடர்பு மற்றும் வர்த்தகப் பிரிவு நிர்வாகி அகமது நஸ்ரி ரஹ்மாட் கூறினார்.

இந்த சுற்றுலா ஊக்குவிப்பு திட்டத்தில் சுற்றுலா இடங்கள், தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய அனைத்து விஷயங்களும் உள்ளடக்கப்படும் என்று அவர் சொன்னார்.

மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்கள் குறிப்பாக குளிக்கும் இடங்கள் குறித்து கடந்த வாரம் முதல் அதிகமானோர் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 50 வெள்ளி மதிப்பிலான சிலாங்கூர் சுற்றுலா 2.0 பற்றுச் சீட்டுகள் விநியோகம் குறித்து கருத்துரைத்த அவர், தேசிய மீட்சித் திட்டத்தின் ஆகக்கடைசி நிலவரங்களைப் பொறுத்து  அதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார்.

கடந்தாண்டில் 200 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை வழங்கியதால் 10,000 பேர் மட்டுமே பயன் பெற முடிந்தது. ஆதலால் இம்முறை 20,000 பேர் பயன் பெறும் வகையில் 50 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை வழங்கவுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :